குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ – தயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத் திரள் சூழ, – குரு

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க – யுத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குரு

3. சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? – குரு

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தட்டிய தட்சைக் குருதியும் ஜலமும்
திறந்துற்றோடுது, பார் – குரு

5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? – குரு



kurusinil thongkiye kuruthiyum vadiya

kurusinil thongkiye kuruthiyum vadiya,
kolkatha malaidhanile nam
kuruvesu suvami kodunththuyar, pavi,
kollay kan kondu.

1. sirasinil munmudi uruththita, arainththe
siluvaiyil serththaiyo – dhayar
thirukkarang kalkalil aanikaladiththar
senaith thiral suzha, – kuru

2. badhakar naduvil baviyinechan
badhakappol thongka – yudha
badhakar parikachangkal pannib
paduththiya kodumaidhanai – kuru

3. sanththirasuriya skala van senaikal
sakiyamal nanuthaiyo! – theva
sunthdhara mainthdha nuyir vidukadsiyal
thudikka nenjsundo? – kuru

4. iittiyal sevakan ettiye kuthdha
iraivan vilavathile – avar
dhattiya dhadsaik kuruthiyum jalamum
thiranththurroduthu, par – kuru

5. erusalem mathe, maruki neyazhuthu
eengkib bulampalaiyo? – nin
eruslaiyathipan ila manavalan
eduthdha kola mitho? – kuru